கொரோனா எதிரொலி: மகன் தற்கொலை செய்ததால் ஆசிட் குடித்த தந்தை.! மனதை உருகவைக்கும் சோக சம்பவம்..

அகமதாபாத்தின் தால்தேஜ் புறநகரில் உள்ள நானோ பரோத்வாஸில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்வீர்சிங் கோஹில். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்ப்பட்டாலும் ராஜ்வீர்சிங்கிற்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்வீர்சிங் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜ்வீர்சிங்கின் தற்கொலையால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜ்வீர்சிங் இறந்த மறுநாள் தூக்கம் தாங்க முடியாத அவரின் தந்தை பாத்ரூமில் உள்ள ஆசிட்டை குடித்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மேலும் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.