இந்தியா Covid-19

இந்தியாவில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு.! நேற்று ஒருநாள் மட்டும் எவ்வளவு தெரியுமா.?

Summary:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 01 ஆயிரத்து 785 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177- ஆக உள்ளது. 


Advertisement