பிரதமராக பதவியேற்ற நடிகை ரஞ்சிதா.? சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவின் நிலை.?

பிரதமராக பதவியேற்ற நடிகை ரஞ்சிதா.? சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவின் நிலை.?


actress-ranjitha-becomes-prime-minister-of-kailasa

பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் தான் நித்யானந்தா. இவர் பெங்களூரில் மடம் அமைத்து பெரும் கூட்டத்தை அவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பின்னர் இவர் மீதான குற்றம் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் இவர் தலைமறைவானார். சிறிது காலம் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. பின் திடீரென்று வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மூலம் அனைவருக்கும் பரிட்சையமானார். இதனை தொடர்ந்து நித்தியானந்தாவின் லீலைகள் ஒவ்வொன்றாக வெட்டவெளிச்சத்திற்கு வந்தது. இதற்க்கு பின் தான் நித்தியானந்தா இந்திய நாட்டைவிட்டு சென்றுள்ளார். 

சிறிதுகாலமாக அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நேரத்தில் தனக்கென ஒரு நாட்டையே உருவாக்கி கைலாசா என்னும் பெயர் சூட்டி இருப்பதாகவும், அதற்கு ஐநா அங்கீகராம் அளித்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது. கைலாசா நாட்டிற்கு யார்வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது லிங்க்டு இன் வலைத்தளத்தில் நடிகை ரஞ்சிதாவின் லிங்க்டு இன் பக்கத்தில் கைலாச நாட்டின் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். நித்யானந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.