ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டல்.! ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை!!

ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டல்.! ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை!!


Actress payal sarkar abuse complaint on gym trainer

பெங்காலி மற்றும் ஹிந்தி மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பாயல் சர்க்கார். இவர் ஏராளமான படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் அவர் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். நடிகை பாயல் சர்க்கார்க்கு தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் ஆபாசமான மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்த நிலையில் அந்த மர்ம நபர் பாயல் சர்க்காரின் ஜிம் பயிற்சியாளர் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் நடிகையின் தூரத்து உறவினராம். இந்நிலையில் நடிகை பாயல் இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Payal sarkar

அதில் அவர், எனது செல்போனுக்கு ஜிம் பயிற்சியாளர்  தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி வந்தார். அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே அவர் மற்றொரு எண்ணிலிருந்து புகைப்படங்களை அனுப்பி டார்ச்சர் செய்தா. மேலும் அவரது ஆசைக்கு உடன்படவில்லை என்றால் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார் என்று  தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.