பிரபல நடிகை நிகிதாவிடம் செல்போன் பறித்த 3 இளைஞர்கள் அதிரடி கைது.!

பிரபல நடிகை நிகிதாவிடம் செல்போன் பறித்த 3 இளைஞர்கள் அதிரடி கைது.!


Actress Nikita Dutta Mobile Snatching Case 3 Aquest Arrested by Police

நடிகை நிகிதா துட்டாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட முஜீப் ஆரிப் மிதேவால, சைப் அப்துல் ரேசாகி அன்சாரி, ராபர் கான் ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நிகிதா துட்டா. இவர் கடந்த நவ. 28 ஆம் தேதி பந்த்ரா பகுதியில் வெளியே சென்றிருந்த சமயத்தில், நடிகையை நோட்டமிட்ட 3 மர்ம நபர்கள் அவரின் அலைபேசியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக நடிகை நிகிதா துட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நடிகையிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை வலைவீசி தேடி வந்தனர். 

Nikita Dutta

மேலும், சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்களிடம் நடந்த விசாரணையில், முஜீப் ஆரிப் மிதேவால, சைப் அப்துல் ரேசாகி அன்சாரி, ராபர் கான் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், இவர்களில் முஜீப் ஆரிப் மிதேவால மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.