சினிமா

உடல் எடை குறைந்து பயங்கர ஸ்லிம்மாக மாறிய மஞ்சிமா மோகன்! புகைப்படம்!

Summary:

Actress manjima mohan latest cute photos

 கடந்தவருடம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அச்சம் என்பது மடமையடா படத்தை  தொடர்ந்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் 'கலியூஞ்சல்' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் சற்று உடல் எடை கூடி கொளுக்கு மொலுக்குனு இருந்த நடிகை மஞ்சிமா உடல் எடை குறைத்து புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என கேட்டு வருகின்றனர்.

manjuma manjuma-mohan


Advertisement