காங்கிரஸ் கட்சியிலிலிருந்து அதிரடியாக விலகிய நடிகை குஷ்பு! பரபரப்புடன் சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதம்!

காங்கிரஸ் கட்சியிலிலிருந்து அதிரடியாக விலகிய நடிகை குஷ்பு! பரபரப்புடன் சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதம்!


actress-kushbu-releave-from-congress-party

சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பூ. அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு 2014ல்  திமுக கட்சியை விட்டு விலகி, சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். ஆறு ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த அவர் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், சமீபகாலமாக நடிகை குஷ்பு பாஜக கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.இந்த நிலையில் இன்று நடிகை குஷ்பு டெல்லி சென்றுள்ளதாகவும், அங்கு ஜேபி நட்ட அவை சந்தித்த பாஜக கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Kushbhu

இந்த நிலையில் நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பு அடுத்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பணத்துக்காகவோ புகழுக்காகவே நான் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப்போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுகின்றனர். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக  முடிவு செய்திருக்கிறேன். ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.