இந்தியா

3 மாதங்களுக்குப் பிறகு வைரலான கற்பழிப்பு வீடியோவால் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள்!

கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல் ஆனதால் குற்றவாளிகளை 3 மாதங்களுக்குப் பிறகு கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

கர்நாடக மாநிலம் தக்ஷினா கன்னடா மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 5 கல்லூரி மாணவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தி காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு மாணவியை பலவந்தமாக கற்பழித்த அவர்கள் நடந்த சம்பவங்ககளை வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை விடுவித்த அவர்கள் இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் கடந்த 3 மாதங்களில் இதுபற்றி எந்த தகவலும் வெளியில் கசியவில்லை. ஆனால் அந்த வீடியோ மட்டும் எப்படியோ வெளியாகி பரவ துவங்கியது. பலராலும் பார்க்கப்பட்ட அந்த வீடியோ ஒரு கட்டத்தில் காவல்துறையினரிடமும் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து அதில் இருந்த நபர்களை அடையாளம் கண்ட போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து 5 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் பயிலும் கல்லூரியில் இருந்து அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வீடியோவை யாரும் இனிமேல் பகிர்ந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement