திருமண ஆசை காட்டி பல முறை பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்: சிக்குகிறாரா முக்கிய மந்திரியின் மகன்..?!

திருமண ஆசை காட்டி பல முறை பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்: சிக்குகிறாரா முக்கிய மந்திரியின் மகன்..?!


A young woman who has been raped several times for want of marriage

இளம் பெண்ணுக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் மகன் மீது புகார் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோஹித் ஜோஷி. இவர் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

அந்த புகாரில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் மகன் ரோஹித் ஜோஷிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பிறகு அவர் என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்து வந்தேன். இதன் பிறகு  என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல்  மாதம் வரை வெவ்வேறு இடங்களில் வைத்து  என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவருகிறார். மேலும் எனக்கு  கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட டெல்லி காவல் நிலைய அதிகாரிகள் ரோஹித் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ரோஹித்,  டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண், டெல்லியின் காளிந்தி குஞ்ச் சாலை அருகே தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருவர் திடீரென அந்த பெண்ணின் மீது கருப்பு மையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.