அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கறி சோறு போட்டு கணவனுக்கு வேட்டு... போலீஸ்காரரின் உயிரை காவு வாங்கிய கள்ளக்காதல்.!
கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த போலீஸ்கார கணவரை கள்ளக்காதலர் மற்றும் நண்பருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ரமேஷ் மனைவி ஷிவானிக்கும் பக்கத்து வீட்டில் இருந்த கார் டிரைவர் ராமாராவ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை காவலர் ரமேஷ் கண்டித்து இருக்கிறார். இதனால் அவரது மனைவி ஷிவானி மற்றும் கள்ளக்காதலன் ராமாராவ் ஆகியோர் ரமேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சம்பவம் நடந்த தினத்தன்று ரமேஷுக்கு பிடித்த மட்டன் மற்றும் கறி தொக்கு போன்றவற்றை சமைத்துக் கொடுத்து அதிக அளவு மது அருந்த வைத்திருக்கிறார் ஷிவானி. ரமேஷ் மது போதையில் உறங்க சென்றதும் மறைந்திருந்த காதலன் ராமராவ், ஷிவானி மற்றும் நீலா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு மறுநாள் அவர் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடி இருக்கின்றனர். இது தொடர்பாக ரமேஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் காவலர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை பிரேத பரிசோதனையின் மூலம் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மனைவி ஷிவானி, ராமராவ் மற்றும் நீலா ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.