ஒரு வயது குழந்தையை மாந்திரீகம் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி...!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தம்பதி அவர்களது ஒரு வயது குழந்தையை மந்திரவாதியிடம் அழைத்து சென்று பறிக்கொடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கோதாவாளி பகுதியில் வசித்து வருபவர் ஜிதேந்திரா. இவரின் ஒரு வயது மகன் அனுஜ்க்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஜிதேந்திராவிடம் உள்ளூர் வாசிகள் சிலர் குழந்தையை அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி அஜய் என்பவரிடம் அழைத்து சென்றால் குணமாகிவிடும் என்று யோசனை கூறியுள்ளனர். இதை கேட்டு ஜிதேந்திராவும் அவரது மனைவியும் குழந்தையை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த மந்திரவாதி முதலில் ஒரு டப்பாவில் இருந்து ஏதோ ஒரு திரவத்தை எடுத்து குழந்தைக்கு கொடுத்துள்ளார். அதன் பின்னர், மாந்தரீக வைத்தியம் எனக் கூறி குழந்தையின் பற்களை உடைத்தும், குழந்தையை தரையில் வீசி அடித்தும் கொடூரமான செயல்களை செய்துள்ளார்.
பதறிப்போன பெற்றோர் குழந்தையை அங்கிருந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். மந்திரவாதியின் இந்த செயலால் குழந்தையின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்து குழந்தை ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தது.
கொடூரமான செயல்களால் தங்கள் குழந்தையின் உயிர் போக காரணமாக இருந்த மந்திரவாதி மீது குழந்தையின் பெற்றோர் காவல துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மந்திரவாதி அஜய்யை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.