ஐந்தாம் வகுப்பு மாணவியை ஜன்னல் வழியாக வீசியெறிந்த கொடூரம்!.. ஆசிரியர் கைது...!!A teacher was arrested for throwing the student through the classroom window

தலைநகர் டெல்லியில் இன்று காலை 11:15 மணி அளவில் 5-ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறையின் ஜன்னல் வழியாக வீசியெறிந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் உள்ள நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் வந்தனா என்ற மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வந்தனாவை கீதா தேஷ்வால் என்ற ஆசிரியர் தாக்கியுள்ளார். அப்போது ரியா என்ற ஆசிரியர் அந்தச் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். 

ஆனால், ஆசிரியர் கீதாவோ சிறுமி வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியதோடு மட்டுமல்லாமல், சிறுமியை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். அந்த ஆசிரியர் சிறுமியை வீசி எறிவதை வெளியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்ட சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.‌ 

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “எங்களுக்கு தகவல் வந்ததும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆசிரியர் கீதாவை கைது செய்துள்ளோம். இந்தச் சம்பவம் நடந்தது இதுவரை உறுதியாகவில்லை. சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர். ஆசிரியர் கீதாவிடம் விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.