சாலையோரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸ்..!! கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் உடல்..!!A suitcase left unattended on the roadside..!! The body of the woman with her hands and feet tied..

அரியானாவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் கை, கால்களை கட்டி, சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

அரியானாவின் பானிபட் நகரில் சிவா கிராமம் அருகே உள்ள ரோத்தக் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதைப் பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள் இதனால், சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேசில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் டேப் வைத்து ஒட்டி, 50 வயதுடைய பெண்ணின் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.
 
இதை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் படுகொலை என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.