BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மக்களே உஷார்..ஆசையாக பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் பிரதீபா தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் குழந்தைகள் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசைபட்டதால் பிரதீபா முத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் 4 பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிரதீபா பிரியாணி பார்சலை பிரித்துள்ளார். அப்போது வாங்கி வந்த நான்கில் ஒரு பார்சல்லில் கோழியின் முழு தலை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதீபா மற்றும் குடும்பத்தினர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சமந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் பிரியாணி பார்சலில் எப்படி கோழியின் தலை வந்தது என்று அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தரமற்ற உணவுகளை தயார் செய்து விற்பனை செய்ததன் அடிப்படையில் அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.