"சார் சாக்லேட் வாங்கி தரேன் எங்க வீட்டுக்கு வரியா..." சிறுமிகளை பயன்படுத்தி தலைமையாசிரியர் செய்த கொடூர செயல்.!



a-head-master-from-rajasthan-sexually-molest-children-i

ராஜஸ்தான்  மாநிலத்தில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் நபர்  அந்தப் பள்ளியில் படிக்கும் ஆறு சிறுமிகளை  சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்  நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்த தலைமையாசிரியரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திர கட்டாரா. இவர்தான் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கிறார். சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

rajasthan

இதனைத் தொடர்ந்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இவரை கைது செய்து விசாரணை நடத்தியது. அப்போது சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 8 முதல் 12 வயதிற்கு உட்பட்ட மாணவிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை  ஒப்புக்  கொண்டிருக்கிறார்  தலைமையாசிரியர்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையின் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தேசத்தில் கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிட்டது.  பள்ளி செல்லும் சிறு குழந்தைகளிலிருந்து  வேலைக்கு செல்லும் பெண்கள் வரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவது தொடர்ந்து கொண்டே வருகிறது.