தம்பியை காப்பாற்ற போராடிய சிறுமி!,.. அபூர்வ நோயால் பரிதாப பலி!,.. சோகத்தில் ஆழ்ந்த கிராமம்...!

தம்பியை காப்பாற்ற போராடிய சிறுமி!,.. அபூர்வ நோயால் பரிதாப பலி!,.. சோகத்தில் ஆழ்ந்த கிராமம்...!



A girl who fought to save her younger brother died of a rare disease

கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள மாட்டூல் பகுதியை சேர்ந்தவர் ரபீக். இவரத் மனைவி மரியம்மை. இவர்களது மகள் அப்ரா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்ரா சக்கர நாற்காலியுடன் வாழ்க்கைய கழித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் அவருக்கு முகமது என்று பெயரிட்டனர். துரதிருஷ்டவசமாக அவருக்கும் தசை சிதைவு நோய் இருந்தது நாளடைவில் தெரியவந்துள்ளது. இந்த அபூர்வ நோயை குணப்படுத்த ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த சிறுமி அப்ரா, தனது தம்பியை காப்பாற்ற நிதியளித்து உதவுமாறு கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக, குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.47.5 கோடி கிடைத்தது. இந்த பணத்தின் மூலம் அப்ரா மற்றும் முகமது ஆகிய இருவரும் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் சிறுமி அப்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தம்பிக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த சமூக வலைத்தளம் மூலம் பணம் திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.