மூன்று வயது மகனை தலைகீழாக தூக்கி தரையில் அடித்து கொலை செய்த தந்தை.... கொடூர சம்பவம்...!!

மூன்று வயது மகனை தலைகீழாக தூக்கி தரையில் அடித்து கொலை செய்த தந்தை.... கொடூர சம்பவம்...!!


A father who threw his three-year-old son upside down and beat him to death

பெற்ற தந்தையே, தனது மூன்று வயது குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியில் முனிராஜா- சுவாதி தம்பதி வசித்து வந்தனர். இவர்களது மகன் மூன்று வயது நிகில். பிறந்ததிலிருந்து நிகிலுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து நிகிலுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சுவாதி முனிராஜாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் முனிராஜா எந்த முனைப்பும் காட்டாததால் சுவாதி அவரை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜா நேற்று காலையில் குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் மூன்று வயது அவரது மகன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். 

அதன் பிறகு முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  தகவல் அறிந்த காளகஸ்தி காவல்துறையினர் முனியராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காளஹஸ்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.