இந்தியா

சாலையில் நின்ற காவலரை காரின் முன்பக்கம் மோதி இழுத்துச்சென்ற ஓட்டுநர் - அதிர்ச்சி வீடியோ.

Summary:

போக்குவரத்துக்கு காவலரை காரில் இடித்து, அவரை சிறிதுதூரம் காரில் இழுத்துச்சென்ற நபரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளன்னர்.

போக்குவரத்துக்கு காவலரை காரில் இடித்து, அவரை சிறிதுதூரம் காரில் இழுத்துச்சென்ற நபரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளன்னர்.

கடந்த 12ம் தேதி மாலை 5 மணியளவில் மஹிபால் என்ற காவலர் டெல்லி தவ்லா குவான் பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக விதியை மீறிவந்த கார் ஒன்றினை நிறுத்தி மஹிபால் விசாரிக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த காரின் ஓட்டுநர் காரனை நிறுத்தாமல் காவலர் மஹிபால் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் போக்குவரத்து காவலர், காரின் முன்பகுதியில் படுத்தவாறு காருடன் சேர்ந்து சில தூரம் சென்று பின்னர் கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் போலீசார் தற்போது அந்த கார் ஓட்டுனரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன்னர். இந்நிலையில் காவலர் காரில் படுத்தவாறு சென்று கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement