அந்த மனசு தான் சார் கடவுள்... சிறுவனின் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!

அந்த மனசு தான் சார் கடவுள்... சிறுவனின் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!


a Child Gives Food to Bird Video Goes Viral on Social Media

குழந்தைகளுக்கு அன்பாக இருக்க கற்றுக்கொடுங்கள். உலகம் வாழ்வதற்கு வேறு இடமாக இருக்கும் என ஐ.எப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா பதிவிட்டுள்ள வீடியோவில், "பச்சிளம் சிறுவன் ஒருவர், தன்னருகே பசியோடு அமர்ந்திருக்கும் பறவைகளுக்கு தனது கைகளால் உணவளிக்கிறார். 

இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. பசியோடு அமர்ந்து உணவுக்காக குரல் கொடுக்கும் அழகிய பறவைகளுக்கு, ஒவ்வொன்றுக்காக சிறுவன் உணவை எடுத்து கொடுக்கிறான்".

இதனை பதிவிட்டுள்ள ஐ.எப்.எஸ் அதிகாரி நந்தா, "கருணை... குழந்தைகளுக்கு அன்பாக இருக்க கற்றுக்கொடுங்கள். உலகம் வாழ்வதற்கு வேறு இடமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.