அடேங்கப்பா.. கல்யாணத்துக்கு பெண் போட்ட கண்டிஷன்.. அசந்துபோன மாப்பிள்ளை.!a Bride Condition With Husband Do and Do not Agreement Sign

பெண்ணொருவர் திருமணம் செய்வதற்கு முன்னதாக தனது கணவருக்கு நிபந்தனை விதித்து, பத்திரத்தில் கையெழுத்துவாங்கி கரம்பிடித்த நிகழ்வு நடந்துள்ளது. 

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்பது தமிழ் பழமொழி. நவீன யுகமான இன்று திருமணங்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் நடைபெறுகிறது. இதில், பெண்களின் திருமண வயது, உரிமை போன்று பல்வேறு சாராம்சங்கள் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற பேருதவி செய்கிறது. 

இந்த நிலையில், மணப்பெண் ஒருவர் தனது கணவரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. காதல் ஒப்பந்தம் என்று பெயரிடப்பட்டுள்ள பத்திரத்தில், கரண் - ஹர்ஷு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மணமகள் தனது எதிர்கால கணவருக்கேனே சில நிபந்தனைகள் விதித்து, இதனை எக்காரணம் கொண்டும் நாம் இருவரும் மீறக்கூடாது என கையெழுத்து வாங்கி திருமணம் செய்துள்ளார். அந்த சாராம்சத்தில், "எங்களின் இரவுகள் எப்போதும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் இருக்கும். 

எனது எதிர்கால பயனுள்ள திட்டங்களில் தலையிடமாட்டேன். ஐ லவ் யூ என்ற வார்த்தை நாளொன்றுக்கு குறைந்தது 3 முறை சொல்லியிருக்க வேண்டும். நீ இல்லாமல் எப்போதும் எலும்பு இல்லாத கோழியை சாப்பிட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்.

நமக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களில் ஒருவரையொருவர் தலையிடாமல், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று சேர்ந்து முடிவெடுப்போம். என்றும் ஒருமையாக இருந்து, ஒருவரையொருவர் நேசிப்போம் என உறுதியளிக்க வேண்டும்" என்ற பல்வேறு சாராம்சத்துடன் பெண் கரம்பிடித்துள்ளார்.