
கைப்புள்ள அடி பலமோ?.. வளைந்து நெளிந்த புள்ளிங்கோ ரைடர், பெண்கள் முன்பு வழுக்கி விழுந்த பரிதாபம்.. கலக்கல் வீடியோ வைரல்.!
உற்சாக மிகுதியில் சாலையில் சென்ற புள்ளிங்கோ சாகசம் செய்ய நினைத்து பல்பு வாங்க சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரைடர் புள்ளிங்கோ, திடீர் உற்சாக மிகுதியில் வாகனத்தில் சாகசம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது, திடீரென வாகனம் அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் அவர் வாகனத்தில் இருந்து கீழே பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர் முன்னால் சென்றுகொண்டு இருந்த மற்றொரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கவிருந்தார்.
ஆனால், அவரின் அதிஷ்டம் தலைக்கவசம் மூலமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு, 2 பெண்கள் முன்பு ஓரமாக சாலையில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இந்த விடீயோவின் பின்னணி குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement