விதவையான தனது 28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது முதியவர்... அதிர்ச்சியில் மக்கள்...!



A 70-year-old man who married his widowed 28-year-old daughter-in-law... shocked people...

விதவையான தனது 28 வயது மருமகளை மாமனார் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தில் வசிப்பவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 

கைலாஷ் யாதவ்வின் மனைவி இறந்துவிட்டார். இவரது மூன்றாவது மகனும் சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், 28 வயதான தனது மருமகள் பூஜாவை சமீபத்தில் கோவிலில் வைத்து கல்யாணம் செய்துக் கொண்டார். 

கைலாஷ் யாதவ் - பூஜாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருவரும்  சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
கணவர் இறந்த பிறகு பூஜா தனிமையில் இருந்தால், மாமனாரை மணக்க ஒப்புக்கொண்டதாக கூறுகின்றனர்.

முதியவரின் திருமணம் குறித்த பேச்சு சமூக ஊடகங்கள் மூலம் அந்த கிராமத்தையும் காவல் நிலையத்தையும் எட்டியுள்ளது. பரவி வரும் புகைப்படத்தின் மூலம் இந்த திருமணம் குறித்து தெரிய வந்ததாக காவல் நிலைய அதிகாரி கூறினார். 

இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இது இருவருக்கு இடையே உள்ள பரஸ்பர விவகாரம் அதனால், யாருக்கேனும் புகார் இருந்தால், காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். 

சிலர் இவர்களது திருமணத்திற்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மருமகள் வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.