வீட்டு வேலைக்கு வந்த 14 வயது சிறுமியை; கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது....!

வீட்டு வேலைக்கு வந்த 14 வயது சிறுமியை; கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது....!



A 14-year-old girl who came for domestic work; The brutally assaulted couple arrested....

ஜார்கண்ட் மாநிலம் குர்கானில், வீட்டு வேலைக்கு வந்த 14 வயது சிறுமி தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், காயமடைந்த நிலையில் இருந்த சிறுமையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

குர்கானில் வசித்து வருபவர் மணிஷ் கட்டார். இவரது மனைவி கமர்ஷீத் கவுர். மனீஷ் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் துணை மேனேஜராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி குர்கானில் உள்ள மக்கள் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு, இந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அமர்த்தியுள்ளனர். அதன் பிறகு சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி, சிறுமியை அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் சிறுமிக்கு சூடுவைத்தும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதா கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அதிகாரிகளிடம் கூறியதாவது, என்னை கயிறு மற்றும் குச்சிகளால் அடித்தார்கள். மேலும் என் கையிலும், உதடுகளிலும் பிளேடை பயன்படுத்தி வெட்டினார்கள். சூடான இரும்பு, இடிக்கி மற்றும் எரியும் தீப்பெட்டிகளை பயன்படுத்தி துன்புறுத்தினார்கள். துணி துவைக்கும் போதும் வேலை செய்யும் போதும் என் ஆடைகளை கழற்றி வைத்தனர்.

பெரும்பாலும் ஆடைகள் இல்லாமல் தரையில் தான் தூங்கினேன். நான் எடுத்து வந்த துணிகளை கிழித்து விட்டனர். அடித்தனர், ஒரு சமயத்தில் அவர்கள் என் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர். மேலும் எனக்கு இரவில் மட்டுமே உணவளித்தனர். அதுவும் ஒரு சிறிய கிண்ணம் அரிசி சாதம் மட்டுமே கொடுத்தனர்.

சில நேரங்களில் குப்பைத் தொட்டியில் இருந்த உணவை எடுத்து சாப்பிட்டேன். மேலும் நான் உதவியாற்றவளாக உணர்ந்தேன். யாரிடமும் கூற பயந்தேன். நான் சரியான நேரத்தில் வேலை செய்யவில்லை என்றும் அதனால் தான் என்னை அடிக்கிறார்கள் என்று கூறினார்கள். என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலம் புதன்கிழமை பிற்பகல் கடமை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. ஐ.பி.சி பிரிவுகள், தன்னிச்சையாக காயப்படுத்துதல், தவறான சிறைவாசம் மற்றும் பல பிரிவுகளில் கீழ் சிறார் நீதிச் சட்டம், போக்சோ சட்டம் போன்ற  12 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.