இந்தியா

ரவுடி கும்பலை பிடிக்கச்சென்ற போலீசார்! திடீரென நடந்த துப்பாக்கிசூடு! 8 காவல்துறையினர் பலி! உ.பி.யில் பயங்கரம்!

Summary:

8 police died in rowdys attack

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விகாஸை தேடி போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அங்கு ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு நடந்த சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படியம், ரவுடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


Advertisement