இந்தியா வர்த்தகம்

ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம்! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

Summary:

7 crores fined for state bank


ஒழுங்கு முறை விதிகளை மீறியதற்காக ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், " பாரத ஸ்டேட் வங்கியின் 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிதி நிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் வருமானம், அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும்  நடத்தை விதிமுறைகள், பெரிய கடன்களுக்கான வரவுகளைப் பற்றிய மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடிகளை புகார் அளித்தல் போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை ஸ்டேட் வங்கி பின்பற்றப்படாமல் விதிமுறைகளை மீறியது தெரியவந்தது.

இதன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.என அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement