இந்தியா

நீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி.! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!

Summary:

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா சென்ற நபர்களில் 6 சிறுவர்கள் நீரோடையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டா என்கிற கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் சென்ற சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி குளித்தனர். 

அப்போது சிறுவர்கள் எதிர்பாராத வகையில் நீரோடையில் மூழ்கினர். நீரில் மூழ்கத் துவங்கிய சிறுவர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்பதற்காக  நீரோடைக்குள் சென்றுள்ளனர். அப்போது  சிறுவர்கள் 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 6 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இச்சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அங்கு நடந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். 


Advertisement