இந்தியா

திடீர் மாயம்! ஆற்றில் மிதந்த 6 வயது சிறுமியின் சடலம்! வேதனையில் கதறும் பெற்றோர்கள்! நாட்டை உலுக்கிய பகீர் சம்பவம்!

Summary:

6 year child dead in river

கேரளா கொல்லம் மாவட்டம் எளவூர் பகுதியை சேர்ந்தவர் தன்யா. இவரது கணவர் பிரதாப் அவர் மஸ்கட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இவர்களுக்கு தேவானந்தா என்ற 6 வயது மகளும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தன்யா அருகில் உள்ள ஆற்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தேவானந்தாவும் அவருடன் வருவதாக கூறியுள்ளார்.ஆனால் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி  தன்யா திரும்பி வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய தன்யாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

 அதாவது வீட்டிற்கு சென்றபோது அவரது 6  வயது மகள் தேவானந்தாவை காணவில்லை. இதனைத்தொடர்ந்து பதறிப்போன அவர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சிறுமியை ஊர் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காத நிலையில் அவர் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை குழந்தை அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் சடலமாக கிடந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை உதவியுடன் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதனைத்தொடர்ந்து மஸ்கட்டில்  உள்ள சிறுமியின் தந்தை ஊருக்கு திரும்பியுள்ளார். அவர் தனது மகளின் சடலத்தை கண்டு கதறி துடித்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement