கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா..! சலூனில் முடிவெட்டியதால் ஏற்பட்ட பரிதாபம்.! கிராமத்துக்கே சீல்.!
மத்திய பிரதேசத்தில் முடிவெட்ட சென்ற 6 பேருக்கு முடிவெட்டும் கடை மூலம் கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பார்கோன் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலைபார்த்துவந்த நிலையியல், கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
சொந்த ஊருக்கு வந்த அவர் , அங்கிருக்கும் சலூன் ஒன்றிற்கு முடிவெட்ட சென்றுள்ளார். அவர் முடிவெட்டிய சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அதே கடையில் முடிவெட்டிய 12 நபர்களை சோதனை செய்ததில் அதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதித் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், முடிவெட்டிய நபருக்கு கொரோனா இல்லை. 12 பேருக்கும் ஒரே துண்டு, ஒரே கருவிகளை கொண்டு முடி வெட்டியதன் மூலம் கொரோனா மற்றவர்களுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையியல், அந்த கிராமமே மூடப்பட்டுள்ளது.