இந்தியா Covid-19

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவிற்கு பலி! அதிர்ச்சியில் கிராமத்தினர்!

Summary:

6 members of a family die due to Covid-19 in Jharkhand

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கத்ராஸ் கிராமத்தில் 88 வயதான மூதாட்டி கடந்த மாதம் டெல்லியில் ஒரு திருமணத்திற்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த ஜூலை 4ஆம் தேதி உயிரிழந்தார். 

அவரை அடக்கம் செய்த பிறகுதான் அந்த மூதாட்டிக்கு கொரோனா பாஸிடிவ் என்ற அறிக்கை வந்தது. அதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். உயிரிழந்த அந்த பெண்மணிக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி முதல்மகனும் கொரோனாவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரின் சகோதரர்கள் நான்கு பேரும் இறந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து கொரோனாவால் இறந்த செய்தி அந்த பகுதி மக்களை அதிற்சிக்குள்ளாக்கியது. இதனால் அந்த ஊர் முழுவதும் சீல் வைக்கப்பட்டு. அப்பகுதி முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement