இந்தியா

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்..! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

5 years old boy traveled from delhi to bangalore via flight alone

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விமானம் மூலம் தனியாக பயணித்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் நான்கு கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 31 அன்றுடன் முடிவடைகிறது. ஊரடங்கு காரணாமாக நாடு முழுவதும் அனைத்துவிதமான போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படிப்படியாக மீண்டும் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையியல் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானம் ஒன்றில் 5 வயது சிறுவன் எந்தவித துணையும் இன்றி தனி ஆளாக பெங்களூரு வந்துள்ளான்.

ஊரடங்கு உத்தரவுக்கு முன் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சிறுவன் ஊரடங்கு காரணமாக அங்கு மாட்டிகொண்டநிலையில் தற்போது விமானம் மூலம் தனி ஆளாக பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளான். பெங்களூரு விமான நிலையத்தில் சிறுவனை வரவேற்க அவரது தாய் காத்திருந்து சிறுவனை அழைத்துச்சென்றார்.


Advertisement