இந்தியா

தொடரும் அசம்பாவிதம்! சுஜித்தை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவன்! தீவிரமாகும் மீட்பு பணி!

Summary:

5 year child fall in borewell at rajasthan

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில்  சுஜித் என்ற 2வயது குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள்  நடைபெற்றநிலையில் குழந்தை இறந்து, அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து நீருக்காக போடப்பட்டு, பயன்படுத்தாமல், பராமரிக்கப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்காணித்து அவை அனைத்தையும் உடனே மூடக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டது.

borewell rajasthan க்கான பட முடிவு

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் வசித்து வரும்  5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்நிலையில் அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை ஆழ்துளைக்கிணற்றுள் விழுந்ததை கண்டதும் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த மீட்பு படையினர் 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அங்கு குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement