கோடை வெயிலில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற மாணவர்கள்.! பரிதாபமாக போன 4 மாணவர்களின் உயிர்.!

கோடை வெயிலில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற மாணவர்கள்.! பரிதாபமாக போன 4 மாணவர்களின் உயிர்.!


4 students dead in struggling inside pond

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் மாணவர்கள் 6 பேர் அருகேயிருந்த குளத்தில் நீச்சல் அடிப்பதற்காக ஒன்றாக சென்றுள்ளனர். ஆனால் அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. குளத்தில் குதித்த மாணவர்களில் சிலர் நீரின் ஆழத்திற்கு சென்றுள்ளனர்.
 
அப்போது நீச்சல் தெரியாதவர்கள் சிக்கி கொண்டனர். இதனால் தங்களை காப்பாற்றும்படி அலறல் சத்தம் போட்டுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த நீச்சல் தெரிந்தவர்கள் உடனடியாக குளத்திற்குள் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 2 மாணவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால் 4 மாணவர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

dead

இதனால் 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. நீச்சல் அடிக்க சென்று குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.