தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கூட்டாக சேர்ந்து பயங்கரம்..! பதறவைக்கும் துயரம்..!

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கூட்டாக சேர்ந்து பயங்கரம்..! பதறவைக்கும் துயரம்..!


4-people-arrested-for-gang-rape-a-15-years-old-girl

கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்களுடைய 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வரும் மேற்குவங்கத்தை சேர்ந்த தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுமியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, சிறுமியின்  நண்பன் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

இச்சம்பவத்தை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிசென்றது அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் என்று் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்றும்  மேலும், நான்கு பேரில் இரண்டு பேர் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.