அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
34 வயது டியூசன் டீச்சர் 11 ஆம் வகுப்பு மாணவனை கற்பழித்த சம்பவம்: மதுவை ஊற்றிக் கொடுத்து அட்டூழியம்...!
34 வயது டியூசன் டீச்சர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மது கொடுத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். திடிரென மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரிவர படிக்காமல் மனரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளான். இதை பார்த்து கவலையடைந்த மாணவனின் பெற்றோர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த மாணவனை அழைத்து விசாரித்த ஆசிரியர்கள் அவனுக்கு மனநல ஆலோசனை வழங்கினர். மனநல ஆலோசனையின் போது ஆலோசகரிடம் மாணவன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளான். தனது டியூசன் டீச்சர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவன் கூறியுள்ளான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த மாணவனின் பெற்றோர் காழல நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 34 வயதான டியூசன் ஆசிரியை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியது, திரிச்சூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கொரோனா காலத்தில் அந்த பகுதியில் உள்ள 34 வயதான பெண்ணின் வீட்டிற்கு டியூசன் படித்து வந்துள்ளான். ஜிம் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்த அந்த பெண் அந்த வேலையை விட்டு விலகி, கொரோனா காலத்தில் வீட்டில் டியூசன் வகுப்புகள் நடத்தி வந்தார். அந்த பெண் தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தனது வீட்டிற்கு டியூசன் படிக்க வந்த 16 வயது மாணவனுக்கு மது கொடுத்துள்ளார். மது குடித்து போதையில் மயக்க நிலைக்கு சென்ற மாணவனை டியூசன் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இவ்வாறு அந்த மாணவனுக்கு மதுகொடுத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த சம்பவம் கொரோனா காலத்தில் நடந்துள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் டியூசன் ஆசிரியை கடந்த 28-ஆம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். டியூசன் படிக்க வந்த சிறுவனுக்கு மதுகொடுத்து டியூசன் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.