இப்படியும் கன்று குட்டி பிறக்குமா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

இப்படியும் கன்று குட்டி பிறக்குமா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..


3-eyes-in-little-cow

சத்திஸ்கர் மாநிலத்தில் மூன்று கண்கள் மற்றும் நான்கு மூக்குடன் பிறந்த கன்றுக்குட்டியை கடவுள் சிவனின் அவதாரம் என ஊர் மக்கள் போற்றுகின்றனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டம், கண்டாய் கிராமத்தை சார்ந்தவர் நீரஜ் சண்டல். இவரின் வீட்டில் பசுமாடுகளை வளர்த்துள்ளார். அதில் ஒரு பசு  ஒன்று கன்று  ஈன்றுள்ளது.

அந்த  பசு  எல்லா பசுவும்  கன்று  போடுவது  போல் போடவில்லை. முதலில் கன்றுக்குட்டி பிறந்ததும் தலையில் ஏதோ காயம் என நினைத்தோம், பின்னர் டார்ச் அடித்து பார்த்த போதுதான் நெற்றியில் கண் என தெரிந்தது. மேலும் மூக்கில் நான்கு துளைகள் வேற இருந்தது” என அதன் உரிமையாளரான நீரஜ் சான்டல் தெரிவித்துள்ளார்.

3 eyes

உடனடியாக கால்நடை நலத்துறைக்கு நீரஜ் தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் கன்றுக்குட்டியை பரிசோதித்து கன்று ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த  கன்று  குட்டியை அறிந்த  ஊர் மக்கள் அனைவரும்  கூடி  வந்து இந்த  கன்று கடவுள் சிவாவின் அவதாரம் என்று கூறி  ஊர் மக்கள் அனைவரும் தேங்காய்- பணம் அளித்து கன்றுக்குட்டியின் ஆசிர்வாதத்தை பெற்றுச்செல்வதாகவும் நீரஜ் சண்டல். தெரிவித்துள்ளார்.

3 eyes