நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 3 நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!

நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 3 நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!



3-consecutive-powerful-earthquakes-in-nepal-people-in-p

நேபாளம் பஜ்ஹாங் மாவட்டத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 5.3, 6.2 மற்றும் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த  நிலநடுக்கத்தால் ஐந்து பேர் காயமடைந்தும், பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தும், நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nepal

இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமானது தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உயரமான கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.