ஒரேயொரு குலுக்கலில் ஓஹோன்னு வாழ்க்கை: ரூ. 25 கோடிக்கு அதிபதியான ஆட்டோ டிரைவர்..!

ஒரேயொரு குலுக்கலில் ஓஹோன்னு வாழ்க்கை: ரூ. 25 கோடிக்கு அதிபதியான ஆட்டோ டிரைவர்..!



25-crore-priced-overnight-to-a-auto-driver

கேரள அரசங்க்கத்தின் லாட்டரி சீட்டு இயக்குனரகம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.25 கோடி முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது. இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. 10 வரிசை எண்கள் கொண்ட  67.50 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

அவற்றில் 90 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் தவிர்த்து மீதி அனைத்து லாட்டரி சீட்டுகளும் விற்பனையானது. இதன் மூலம் கேரள அரசின் லாட்டரி துறைக்கு ரூ.330 கோடி வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரள நிதியமைச்சர் பாலகோபால் குலுக்கலை தொடங்கி வைத்தார். இதில் முதல் பரிசு ரூ.25 கோடி டி.ஜே. 750605 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது.

முதல் பரிசு பெற்ற லாட்டரி சீட்டை, திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் என்ற பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அனூப்  என்பவர் வாங்கி இருந்தார். இது குறித்து அவர், ரூ.25 கோடி பம்பர் பரிசு எனக்கு கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வந்த எனக்கு போதிய வருமானம் இல்லாததால் மலேசியாவில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். இனிமேல் அதற்கு அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.