இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்ற 21 பேர் பரிதாப பலி.! துயரச்சம்பவம்.!

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்ற 21 பேர் பரிதாப பலி.! துயரச்சம்பவம்.!



22-dead-as-roof-collapses-at-crematorium-in-up

உத்தர பிரதேச மாநிலம் முராத்நகரில் மயான கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படு காயமடைந்தனர். அப்பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் அந்த மயானத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென மழை பெய்துள்ளது.

இந்தநிலையில்,  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மழைக்கு ஒதுங்குவதற்காக அங்குள்ள ஒரு கட்டடத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்து பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அதில் சிக்கிய 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கொட்டகை இடிந்து விழுந்ததில் இதுவரை  38 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ .2 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.