ஒருதலைக்காதலை ஏற்க மறுத்த 21 வயது இளம்பெண் குத்திக்கொலை.. திருநங்கை வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்.!

தனது அக்காவுடன் பணியாற்றி வரும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த திருநங்கை, காதலை ஏற்க மறுத்ததால் அக்காவின் தோழியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. விக்ரமின் ஐ திரைப்பட பாணியில் தான் நேசிக்கும் நபரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இயலாத பேதை மனதின் காதல் ஆசையால் 21 வயது இளம்பெண் உயிரிழந்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சரியால் மாவட்டத்தில் வசித்து வரும் 21 வயது இளம்பெண் அஞ்சலி சலூரி. இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். பெண்ணுடன் பணியாற்றி வருபவர் பரமேஸ்வரி. இவருக்கு மகேஸ்வரி என்று திருநங்கை சகோதரி இருக்கிறார்.
மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் நிலையில், பரமேஸ்வரியின் மூலமாக அஞ்சலிக்கும் - மகேஸ்வரிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. மூவரும் ஒரே பகுதியில் பணியாற்றி வந்ததால், வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். இதற்கிடையில், திருநங்கையான மகேஸ்வரிக்கு அஞ்சலியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மகேஸ்வரி அஞ்சலியை வற்புறுத்தி வந்துள்ளார். அஞ்சலிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இவர்களுக்கு இடையே இதுகுறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆத்திரமாத மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து காயத்தோடு நள்ளிரவில் மருத்துவமனையில் அஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் வீட்டருகே வசித்து வந்த விக்னேஷ் என்பவர் சமபவம் தொடர்பாக அஞ்சலியின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர் அஞ்சலியை பார்ப்பதற்குள் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருநங்கை மகேஸ்வரியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.