"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
2024 - தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எனது லட்சியம்; திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி..!
2024-ல் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே தனது கடைசி போராட்டம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா, மேற்குவங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கட்சி பேரணியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும். டெல்லியில் ஆட்சியில் இருந்து பாரதிய ஜனதாவை அகற்றுவதே எனது கடைசி போராட்டம்.
எந்த விலை கொடுத்தாவது பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தை பாதுகாப்பது நமது முதல் போராட்டம். 2024-ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை நாம் நீக்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். மேலும் தோல்வியை அனைவரும் சந்திக்க வேண்டும்.
இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவர், இருந்தபோதும் அவரும் தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக 30 எம்.பி.க்களை வைத்துள்ளது. ஆனால், பீகார் கைநழுவி போய்விட்டது. இதேபோன்று நிறைய வர இருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்றார்.