ஆக்சிஜன் பற்றாக்குறைவால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.! அதிர்ச்சி தகவல்.!



20 corona patient died for oxygen demand

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் சூழ்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் டெல்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்காராம் தனியார் மருத்துவமனையில், ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலையில் இருந்து வந்த கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அழுத்த ஆக்சிஜன்தான் என  கூறப்படுகிறது.

coronaடெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் சப்ளை இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200- பேரின் உயிருக்க்கு ஆபத்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.