கேரளாவில் அதிகாலையில் நடந்த விமான விபத்து.! கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலி.!

கேரளாவில் அதிகாலையில் நடந்த விமான விபத்து.! கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலி.!


2-navy-officers-killed-after-glider-crashes-in-kochi

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள், பவர் கிளைடர் விமானத்தில் இன்று காலை வழக்கம்போல் இன்று காலை 7மணி அளவில் பயிற்சியில்  ஈடுபட்டிருந்னர். இந்த பயிற்சி விமானம் தொப்பும்பாடி பாலம் அருகே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

அங்கு நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமானத்தில் சிக்கியிருந்த அதிகாரி ராஜீவ் ஜா, மற்றொரு அதிகாரி சுனில் குமார் ஆகியோரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.


ஆனால், அங்கு கொண்டு சென்ற இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்ப்பட்டது.விபத்து குறித்து தனி குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான லெப்டினென்ட் அதிகாரி ராஜீவ் ஜா டேராடூனையும், சுனில் குமார் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.