BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
19 வயது பெண்ணுடன்.. 20 வயது பெண்ணுக்கு திருமணம்.! இந்து முறைப்படி.. கிராம மக்கள் ஆதரவுடன் கொண்டாட்டம்.!
மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரபன்ஸ் பகுதியில் இரு இளம் பெண்கள் கோவில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இளம் பெண்களான ரியா (வயது 19 ) மற்றும் ராக்கி (வயது 20 )இருவரும் நடன கலைஞர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் நீண்ட காலமாக தன் பாலின காதல் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் தங்களது காதலை தெரிவித்து அதற்கு சம்மதம் கேட்டுள்ளனர்.

ஆனால், இரு வீட்டினரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே, கிராம மக்கள் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு கோவிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது செயலுக்கு கிராம மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் திருமணம் மீது ஆசை.. பிரான்சிலிருந்து மானாமதுரைக்கு பறந்து வந்த தம்பதி.!
ஆரம்பத்திலிருந்து அவர்களது குடும்பத்தில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் இருவரும் தனியே திருமணம் செய்து கொண்டு எளிமையாக தங்களது வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: புதுமணப்பெண், மாப்பிள்ளை கூட்டத்தில் விழுந்து சாவு.. ஜோடியா போய்ட்டீங்களே.? - கதறும் உறவினர்கள்.!