இந்தியா 18 Plus

17 வயது சிறுமியுடன் ஓட்டம் பிடித்த 19 வயது இளம் பெண்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.

Summary:

19 years old girl escaped with 17 years old girl

மத்திய பிரதேச மாநிலம் பங்கோலா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி அங்கிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் அந்த சிறுமியை தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் அந்த சிறுமியையும் அவருடன் இருந்த 19 வயது இளம் பெண்ணையும் கண்டுபிடித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த 19 வயது பெண்தான் தங்கள் மகளை கடத்திவிட்டதாக போலீசில் புகார் கூறினர்.

அந்த பெண் ஏன் இவரை கடத்தவேண்டும் என விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குறிப்பிட்ட இந்த இரண்டு பெண்களும் ஒருவரை ஒரு காதலிப்பதாகவும், இதற்கு முன்னர் இதேபோல் இருவரும் ஓடிவிட்டதாகவும், எப்படியோ கண்டுபிடித்து பஞ்சாயத்து நடத்தியதில் அந்த 19 வயது சிறுமிக்கு அபராதமும், இனி அந்த பெண்ணை பார்க்க கூடாது பேச கூடாது என கூறி அனுப்பியதாகவும் தெரிவந்தது.

இந்நிலையில்தான் குறிப்பிட்ட இரண்டுபேரும் மீண்டும் வீட்டிற்கு தெரியாமல் ஓட்டம் பிடித்துள்ளனர். 17 வயது சிறுமி அந்த பெண் தன்னை கடத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்த சிறுமிக்கு 18 வயது பூர்த்தியக்கவில்லை என்பதால் 19 வயது பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Advertisement