16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி தீ வைத்து கொளுத்தி கொன்ற காதலன்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி தீ வைத்து கொளுத்தி கொன்ற காதலன்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!


16 years old girl killed by one side lover boy

அறியாத வயதில் காதல் வலையில் விழுந்த சிறுமியை கர்ப்பிணியாக்கிய கயவன், அவரை எரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டம், ராஜவுளி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதல் ஜோடி தனிமையில் இருந்ததால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். 

இந்த தகவலை காதலரிடம் தெரிவித்த சிறுமி, தன்னை திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த காதலன், தனது குடும்பத்தாரோடு சேர்ந்து சிறுமியை எரித்து கொலை செய்துள்ளான். 

India

தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூற, கயவர்கள் கூட்டம் சிறுமியின் பெற்றோரை கடந்த சில நாட்களாக வீட்டு சிறையில் வைத்துள்ளது. 

அவர்களிடம் இருந்து தப்பி வந்த குடும்பத்தினர், ராஜவுளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை கொலை செய்ததாக, அவரின் காதலர் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.