த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
பயங்கர வயிற்று வலியால் துடித்த 16 வயது பள்ளி மாணவி... பரிசோதனையில் பெற்றோர் அதிர்ச்சி...
ஜார்கண்ட் மாநிலம் சிம்தேக்கா மாவட்டத்தில் கோலேபிரா என்ற பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 16 வயது பழங்குடியின மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென பயங்கர வயிற்று வலியால் துடித்துள்ளார் அந்த சிறுமி. அதனையடுத்து சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் சிறுமியின் பெற்றோர்.
அங்கு சிறுமிக்கு பரிசோதனை மேற்கொண்டதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மூன்று பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆகாஷ் டெட், ரோஹித் குலு , அமன் டுங்டுங் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.