ஆசைஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்.! பேரதிர்ச்சி சம்பவம்!!

ஆசைஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்.! பேரதிர்ச்சி சம்பவம்!!


16-years-girl-die-after-eating-shawarma-in-kerala

கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள உணவகத்தில், அருகில் டியூசன் செண்டரில் படிக்கும் மாணவ மாணவிகள் பலர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தேவனந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Shawarma

மேலும் தரமற்ற முறையில் கெட்டுப்போன சிக்கனில் உருவாக்கப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டதால்தான் உடல்நலக் கோளாறு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.