பதற்றத்துடன் இருந்த பயணி.. சூட்கேஸை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

பதற்றத்துடன் இருந்த பயணி.. சூட்கேஸை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..


16 lakhs worth gold found in Airport

விமானநிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த பயணியின் சூட்கேசில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டின் பல்வேறு விமானநிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற தங்க கடத்தலை தடுக்க அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று காலை துபாயிலிருந்து மங்களூருவுக்கு ஒரு விமானம் வந்திறங்கியது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒருபயணி மட்டும் சற்று பதட்டத்துடன் இருப்பதை பார்த்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சோதனை செய்துள்ளனர். அவர் கொண்டுவந்த சூட்கேஸ், இழுத்துச் செல்லும் சூட்கேஸ் என அனைத்தையும் சோதனை செய்தனர்.

ஆனால் எதிலும் எந்த ஒரு கடத்தல் பொருளும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அந்த பயணியின் சூட்கேஸை மீண்டும் சோதனை செய்தபோது, சூட்கேசில் உள்ள கம்பி வடிவில் தங்கத்தைக் மறைத்துவைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Crime

இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பயணி உத்தர கன்னடா மாவட்டம் முருடேஸ்வர் பகுதியைச் சேர்ந்த முகமது அவான் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.16.52 லட்சம் மதிப்பிலான 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.