நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தாயின் நினைவாக 1500 பேருக்கு விருந்தளித்த நபரால் பரவிய கொரோனா..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! தாயின் நினைவாக 1500 பேருக்கு விருந்தளித்த நபரால் பரவிய கொரோனா..!



1500-people-ku-virunthu-alitha-dubai-nabar

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்நோயால் இந்தியாவில் மட்டும் 70க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். 

இதனால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்ப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி மற்ற எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளார். 

corona

இந்நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் துபாயிலிருந்து வந்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த அந்த நபர் உயிரிழந்த தனது தாயின் நினைவாக அப்பகுதியில் 1500 பேருக்கு விருந்து அளித்துள்ளார். 

அதனை அடுத்து சில நாட்களிலேயே சுரேஷ் என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து மருத்துவமனை சென்ற சுரேஷ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

அதன்பிறகு குடும்பத்தில் 11 பேருக்கும் இந்நோய் தொற்று பரவியது உறுதியாகி உள்ளது. அதனை அடுத்து தற்போது விருந்தில் பங்கேற்ற 1500 பேரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.