கூட்டு பலாத்காரம்: நிர்வாணமாக இரத்தப்போக்குடன் 2கிமீ நடந்தே வந்த சிறுமி.! உதவாமல் வீடியோ எடுத்த மனிதமிருகங்கள்.!

கூட்டு பலாத்காரம்: நிர்வாணமாக இரத்தப்போக்குடன் 2கிமீ நடந்தே வந்த சிறுமி.! உதவாமல் வீடியோ எடுத்த மனிதமிருகங்கள்.!


15-year-kid-sexully-abused-and-throw-her-without-dress

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்பொழுது அவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவரை நிர்வாணமாக அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி உதவியற்ற நிலையில் இரத்தப்போக்குடன் சாலையில் நிர்வாணமாக சுமார் 2கிமீ நடந்தே தனது கிராமத்திற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். இதில் என்ன கொடுமையென்றால் அந்த சிறுமி நடந்து வந்த வழியில் அவரை கண்ட யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. பதிலுக்கு வீடியோ எடுத்துள்ளனர். வீட்டிற்கு ரத்த காயத்துடன் வந்த தனது மகளைக் கண்ட பெற்றோர்கள் பதறி போய் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரிவு 376டி (கும்பல் பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி நிர்வாணமாக நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.